• Mar 28 2023

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் எஸ்டிபி ரோசரியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா...? தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும்  சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி.இந்த சீரியல் ஒரு குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவிகள் படும் சிரமங்கள் குறித்து நன்றாக எடுத்துரைக்கிறது.மேலும் இதில் பாக்கியலட்சுமி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. பாக்கியலட்சுமி கதாபாத்திரத்திற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.


மேலும் இதில் கணவர் விட்டுச் சென்ற பிறகும் தனது குடும்பத்தை தாங்கி நிற்கும் பாக்யாவின் தைரியம் குடும்பப் பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


அவருக்கு உறுதுணையாக ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் பாக்கியாவின் மாமனாராக நடிகர் எஸ்டிபி ரோசரி நடித்து வருகிறார்.அத்தோடு இவர் சீரியலில் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


இவர் 90களில் முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்.எனினும் தற்போது இவர் சீரியலில் நடிக்க தொடங்கிய நிலையில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


மேலும் இவர் நடித்த படங்களுக்கு பல விருதுகளையும் பெற்றுள்ளார். ரோசரி 1991 இல் ஒய்.ஜி.எம். அகாடமி ஆஃப் ஆக்டிங் அண்ட் ஃபைன் ஆர்ட்ஸில் சேர்ந்தபோது நடிப்புக்குத் தொடங்கினார்.அங்கு அவர் ஒரு குழுவின் ஒரு பகுதியாக இருந்தார் மற்றும்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தார்.


சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.அத்தோடு இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


எனினும் தற்போது வயதான வேடத்தில் இருக்கும் இளமையில் டாப் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் விதமாக ஜொலித்துள்ளார். அத்தோடு இவரின் அன்சீன் புகைப்படங்களும் தற்போது வைரல் ஆகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement