நடிகை ஊர்வசியின் இரண்டாவது கணவனையும் மகனையும் பார்த்திருக்கின்றீர்களா?- வைரலாகி வரும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் 90களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஊர்வசி. இவரது இயற்பெயர் கவிதா ரஞ்சனி. சினிமாவிற்காக தான் தனது பெயரை ஊர்வசி என மாற்றிக் கொண்டார்.

மேலும் இவர் இயக்குநர் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைப் தொடர்ந்தே பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அத்தோடு இவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் என்பவரை தான் 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு குஞ்சட்டா என்ற மகள் இருக்கிறாள்.

பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்தார்கள், மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ஊர்வசி கேட்ட அவரது கணவர் ஊர்வசி எப்போதும் மது போதையில் இருப்பார் அவரிடம் எப்படி பெண்ணை கொடுப்பது என போராடி மகளை அவருடனே வைத்துக் கொண்டார்.

இந்த நேரத்தில் ஊர்வசியின் சகோதரியும், நடிகையுமான கல்பனாவின் மரணமும் அவரை மிகவும் பாதித்தது. இந்த கஷ்டங்களை தாண்டி ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்தார்.

சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்த ஊர்வசிக்கு ஒரு மகன் உள்ளார். தற்போது ஊர்வசி குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்