• Mar 26 2023

நடிகை பானுபிரியாவின் மகள், முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா....இதோ புகைப்படங்கள்..!

Aishu / 6 days ago

Advertisement

Listen News!

80ஸ், 90ஸ்-களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர்  தான் பானுபிரியா. இவர் ரஜினியுடன் தளபதி, கமலுடன் மகராசன், சத்யராஜுடன் புதுமனிதன், கட்டளை என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக இவர் நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள் படங்கள் தமிழில் வெளிவந்தது. இதன்பின்னர், சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். அத்தோடு இப்படம் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை பானுபிரியா 1998ஆம் ஆண்டு அதர்ஷ் கௌஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அபிநயா எனும் ஒரு மகளும் உள்ளனர்.

அத்தோடு கடந்த 2005ஆம் ஆண்டு தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார் பானுபிரியா. இதன்பின்னர்  கடந்த 2018ஆம் ஆண்டு பானுபிரியாவின் முன்னாள் கணவர் அத்ரஷ் மரணமடைந்தார்.

இவ்வாறுஇருக்கையில், தனது கணவர் மற்றும் மகளுடன் பானுபிரியா எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..







 

Advertisement

Advertisement

Advertisement