• Mar 28 2023

நடிகர் சரத்பாபுவின் மனைவியைப் பார்த்திருக்கின்றீர்களா?- அட இவங்களும் பிரபல நடிகைதானா..?

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ், கன்னடம் மற்றும் ஒரு சில மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் 200க்கு மேற்பட்ட படங்களில் நடித்தவர் தான் சரத்பாபு.இவர் 1973ல் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமாகினார்.

அதன்பின்பு தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற கே பாலசந்தர் திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார்.  பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.


அந்த காலத்தில் பல பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தவர் சரத்பாபு.இவர் பெரும்பாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாகவே அமைந்துள்ளது. அண்ணாமலை, வேலைக்காரன், முத்து, பாபா போன்ற பல படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இது தவிர இந்த தலை முறை நடிகர்களான சூர்யா விஜய் அஜித் ஆகியோருடனும் நடித்து வருகின்றார்.இவர் நடிகை ராமா பிரபா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.இவருக்கு ஒரு மகனும் இருக்கின்றார். இப்படியான நிலையில் நீண்ட நாளுக்குப் பிறகு சரத்பாபுவின் மனைவியின் புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement