• Apr 16 2024

நடிகர் மம்மூட்டியின் மனைவியைப் பார்த்திருக்கின்றீர்களா?- ஹீரோயினுக்கு டஃப் கொடுப்பார் போல இருக்கே

stella / 11 months ago

Advertisement

Listen News!


மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் மம்மூட்டி. இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.தமிழில் பல படங்கள் இவர் நடித்திருந்தாலும் ராம் இயக்கத்தில் 2018 -ம் ஆண்டு வெளிவந்த பேரன்பு திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

நடிகர் மம்மூட்டி 1979 -ம் ஆண்டு சுல்பாத் குட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானும் பல படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் மம்மூட்டி தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.


மேலும் துல்கர் சல்மான் நடிப்பில் அண்மையில் வெளியாகிய சீதாராமம் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.


அதே போல மமமூட்டி தற்பொழுது நடிகை ஜோதிகாவுடன் இணைந்து காதல் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் படப்பிடிப்பும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement