நடிகர் நகுலின் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா?- செம கியூட்டான போட்டோ

885

தமிழ் சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நகுல்.

தமிழில் இப்படத்தை தொடர்ந்து காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மாசிலாமணி கந்தக் கோட்டை போன்ற இன்னும் சில படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபல்யமானார். அந்த வகையில் தற்பொழுது எரியும் கண்ணாடி, வாசக்கோட காமா உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

இதுமட்டுமின்றி சமீபத்தில் விஜய்டிவியில் நடந்துமுடிந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று இருந்தார் . இவர் ஸ்ருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் சென்ற வருடம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்கு அகிரா என பெயர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகளுடன் அண்மையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகர் நகுலின் மகளா இது.. நன்றாக வளர்ந்து விட்டாரே.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.