• Apr 19 2024

விடுதலை படத்திற்காக சூரிக்கு இரண்டு சம்பளம் பேசப்பட்டிருக்கின்றதா?- அதுவும் இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வரும் சூரி இவர் தற்பொழுது கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார். அந்த வகையில் இவர் இயக்குநர வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம்  வருகின்ற மார்ச் 31 -ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியூட்டு விழா அண்மையில் மிகவும் பிரமாண்டமாக இடம் பெற்றது.ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் என்பன வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.


விடுதலை படத்தைத் தொடர்ந்து தற்போது சூரி கூழாங்கல் படத்தின் இயக்குநரான வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் தான் அந்த படத்தை தயாரிக்கிறார்.

விடுதலை படம் ஆரம்பிக்கும் போது சூரிக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ. 30 லட்சம் தானாம். ஆனால் இப்படம் இரண்டு பாகங்களாக வருவதனால் சூரியின் சம்பளத்தை 40 லட்சமாக உயர்த்தியுள்ளார்களாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.  


Advertisement

Advertisement

Advertisement