• Apr 19 2024

விஜய்யை விட்டு பிரிந்து சென்றுவிட்டாரா சங்கீதா?... உண்மையில் நடந்தது என்ன?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் நடிகர் விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு பிள்ளைகளுடன் சென்றுவிட்டார் என்றும் தகவல் வெளிவந்தது.

இந்த சர்ச்சைக்குரிய தகவலுடன் இணைந்து பிரபல நடிகை ஒருவருடன் விஜய்க்கும் தவறான உறவு இருக்கிறது என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால், அது உண்மையில்லை. அந்த நடிகை தனது நீண்ட கால காதலரை தான் இன்னும் 4 வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொள்ள போகிறார் என தகவல் வெளிவந்தது.

இதன்பின் அந்த நடிகைக்கும் விஜய்க்கும் இடையே எந்த ஒரு தவறான உறவும் இல்லை என கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் விஜய்க்கும், அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லையாம். விஜய்யும் அவருடைய மனைவி சங்கீதாவும் சென்னையில் உள்ள வீட்டில் தான் இருக்கிறார்கள். சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு செல்லவில்லை என பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இதன்முலம் இந்த சர்ச்சைக்கு ஒரு பதில் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.




Advertisement

Advertisement

Advertisement