• Feb 02 2023

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கமல்ஹாசன் இத்தனை கோடி சம்பளமாகப் பெற்றுள்ளாரா?- இதை யாரும் எதிர்பார்க்கலையே

Listen News!
stella / 2 weeks ago
image

Advertisement

Listen News!

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 9ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி 100 நாட்களை எட்டிவிட்டது. வரும் நாட்களில் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி நடக்க இருக்கிறது, அந்த நாளுக்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.அத்தோடு அசீம் ஜெயிப்பாரா விக்ரமன் ஜெயிப்பாரா என அனைவரும் ஆவலாக உள்ளனர்.

பணமூட்டை டாஸ்க்கில் ரூ.3 லட்சத்தை எடுத்துக் கொண்டு கதிரவன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.அதனை அடுத்து பணப் பெட்டி வைக்கப்பட்டது.அதில் 13 லட்சம் பணத்துடன் அமுதவாணன் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.


மேலும் இதுவரை நடந்துமுடிந்த 5 சீசன்களில் ஒருவராவது வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டுக்குள் அனுப்பப்படுவது வழக்கம்.ஆனால் இந்த சீசனில் மட்டும் வைல்ட் காட் என்ட்ரியாக யாரும் போகவில்லை.


கமல்ஹாசன் அவர்கள் இந்த பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை மொத்தம் 15 வாரங்கள் தொகுத்து வழங்கியுள்ளார், ஒரு வாரம் கூடுதலாக இருக்கலாம்.இந்த பிக்பாஸ் 6வது சீசனிற்காக கமல்ஹாசன் அவர்கள் ரூ. 75 கோடி சம்பளம் பெற்றிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கணக்கு வைத்து பார்த்தால் ஒரு எபிசோடிற்கு அவர் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பார் என்றும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement