• Apr 20 2024

இந்தப் படத்தை தனுஷ் தவற விட்டிருக்காரா..? வருந்தும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநரான செல்வராகவனின் இயக்கத்தில் அமைந்த 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்தவரே நடிகர் தனுஷ். இவர் குறிப்பாக தமிழ் சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட ஒரு கலைஞராக இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

அதாவது சிறந்த நடிகர் மட்டுமல்லாது இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என அனைத்து துறைகளிலும் கொடி கட்டிப் பறந்து வருகின்றார். அதுமட்டுமல்லாது தற்போது ஒரே சமயத்தில் பல படங்களில் பல மொழிகளில் யாருமே எதிர் பார்க்காத வண்ணம் நடித்து வருகின்றார்.

தனது அறிமுகப் படத்தை தொடர்ந்து 'பொல்லாதவன், சுள்ளான், வேலையில்லா பட்டதாரி' என எண்ணிலடங்காத பல படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் பல வருடங்கள் கழித்து 'நானே வருவேன்' என்ற படத்தில் நடித்து வருகின்றார். அதுமட்டுமல்லாது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் 'வாத்தி' என்ற படத்திலும் நடித்து வருகின்றார்.

அதேபோன்று மித்ரன் இயக்கத்திலும் அனிருத்தின் இசையிலும் தற்போது 'திருச்சிற்றம்பலம்' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் நிறைவு பெற்ற நிலையில் இம்மாதம் வெளியாகவுள்ளது.

இப்படத்திலும் கதாநாயகனாக தனுஷே நடித்திருக்கின்றார். அத்தோடு தனுஷின் படம் பல மாதங்கள் கழித்து தற்போது திரையில் வெளியாவதால் ரசிகர்கள் இப்படத்திற்காக இப்போதிலிருந்தே பெரும் ஆவலாக காத்து இருக்கின்றனர்.

இவ்வாறாக பல படங்களிலும் நடித்து வெற்றி நாயகனாக வாகை சூடி இருக்கும் தனுஷ் தன் திரைவாழ்க்கையில் பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் சில மெகாஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.

அவ்வாறான படங்களின் வரிசையில் கடந்த 2005-ஆம் ஆண்டு வின்சென்ட் செல்வா இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியான 'ஜித்தன்' என்ற படத்தில் தனுஷ் தான் முதலில் நடிக்க வேண்டி இருந்ததாகக் கூறப்படுகின்றது.

அதாவது இயக்குநர் வின்சென்ட் செல்வா தனுஷை மனதில் வைத்துதான் இப்படத்திற்கான கதையை உருவாக்கினாராம். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தனுஷ் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக அதன் பின்னர் ஜித்தன் ரமேஷினை தொடர்பு கொண்டு அவரை இப்படத்தில் நடிக்க வைத்ததாகக் கூறப்படுகின்றது.

அந்தக் காலகட்டத்தில் வெளியான படங்களிலே மிகப்பெரிய வெற்றிப்படமாக இவ் 'ஜித்தன்' படம் அமைந்திருந்தமை யாவரும் அறிந்த ஒரு விடயமே. இதனைக் கேள்விப் பட்ட நம்ம தனுஷ் ரசிகர்கள் "அடடே நம்ம தலைவரால நடிக்க முடியாமல் போச்சே" எனக் கவலை தெரிவித்து வருகின்றார்களாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement