தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதால் அவருடைய ரசிகர்கள் மிகவும் குஷியடைந்துள்ளனர்.
அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான டாக்டர் திரைப்படம் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு மாஸ் வசூல் செய்தது.அவரது திரைப்பயணத்தில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையை பெற்றது.

அந்த வரிசையில் தற்பொழுது டான் திரைப்படமும் இடம் பிடித்துள்ளது. இப்படம் ரிலீஸ் ஆன 12 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வரை வசூலித்ததாக படத்தை தயாரித்த லைகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
தமிழகத்தில் முதல் வார முடிவில் டான் திரைப்படம் ரூ. 22.85 கோடி வசூலித்த படம் மொத்தமாக இதுவரை ரூ. 70.85 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வார முடிவில் படம் தமிழகத்தில் ரூ. 75 கோடி வரை வசூலை எட்டும் என கூறப்படுவதைக் காணலாம்.
பிறசெய்திகள்:
- விடுதலை திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- இரண்டு பாகமாக வெளியாகவுள்ளதாம்
- ‘கடைசியில் அவர் பூனை மற்றும் நாயுடன் தான் சாகப் போகின்றார்’- சமந்தா குறித்து டுவிட் போட்ட நபர்
- நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க முடிவு செய்த ரூசோ பிரதர்ஸ்-அட சூப்பர் தகவலாச்சே
- ஹைதராபாத்திற்கு தனி விமானத்தில் சென்ற நடிகர் அஜித்- AK61 லேட்டஸ்ட் அப்டேட்!
- ‘ஒரு முடிவோட தான் இது எல்லாம் பண்ணுறீங்க போல’-ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விமர்சித்து வரும் ரசிகர்கள்
- மலேசியா மற்றும் துபாயின் புர்ஜ் கலிஃபா ஆகிய இடங்களில் நடக்கும் விக்ரம் படத்தின் ப்ரமோஷன்
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்