• Mar 23 2023

நடிகை பிரியா பவானி சங்கர் காதலரை பிரேக்கப் செய்துவிட்டாரா..? இதுதான் காரணமா?

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கைவசம் பல படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் சீரியல்களில் நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆன அவர் அதன் பின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் அதிகம் ரசிகர்கள் பட்டாளமே உள்ளார்கள். அதில் அவருக்கு 3.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளார்கள்.அவர்களுக்காகவே தொடர்ந்து புகைப்படங்களிலும்  அவர் வெளியிட்டு வருகிறார்.


சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த பிரியா பவானி சங்கர், கையில் வரிசையாக அடுத்தடுத்த படங்களில் வைத்து நடித்து வருகிறார்.

இதற்கிடையில் தன் காதலர் ராஜ்வேலுடன் வெளிநாட்டுக்கு பறந்து இரு மாதங்கள் ஜாலியாக இருந்து வந்தார்.எனினும் சமீபத்தில் ஈசிஆர் பகுதியில் பெரிய பங்களாவை வாங்கி காதலருடன் குடியேறினார். அத்தோடு  ஈசிஆர் பகுதிக்கு பக்கத்தில் ஒரு ரெஸ்டாரெண்ட் ஆரம்பித்து அதையும் பார்த்து வருகிறார்.


இவ்வாறுஇருக்கையில்  பிரியா பவானி சங்கர் தன் காதலர் ராஜ்வேலுடன் பிரேக்கப் செய்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், திருமணத்திற்கு பின் நடிக்க வேண்டாம் என்று ராஜ்வேல் கூறியதால் தான் பிரியா பவானி சங்கர் பிரேக்கப் செய்திருப்பதாகவும், ஆனால் அது உண்மை இல்லை என்றும்  தெரிவித்து இருக்கிறார்.

எனினும் தற்போதைக்கு பிரியா பவானி சங்கர் திருமணம் செய்யப்போவதில்லை என்றும் 4 ஆண்டுகளுக்கு பின் நடக்கலாம் என்று அவரது தோழிகளிடம் கூறி புலம்பியதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement