• Mar 29 2024

ஷிவின் தலையில் விஃக்கை ஒட்டி வச்சிருக்கிறாரா?- அப்போ அது ஒரிஜினல் தலை முடி கிடையாதா?- அசீம் கூறிய பரபரப்புத் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டிற்குள் தற்பொழுது 9 போட்டியாளர்கள் மாத்திரமே மீதமாக உள்ள நிலையில்  Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்த வண்ணம் இருப்பதால், பிக் பாஸ் வீடே தற்போது எமோஷனல் மோடிற்கு மாறி உள்ளது.இதற்கு மத்தியில், ஷிவின் குறித்து அசிம் பேசி உள்ள விஷயங்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அசிம், கதிரவன் உள்ளிட்டோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, "ஷிவின் பாத்ரூம் போய் 3 மணி நேரம் ஆச்சா?" என அசிம் கேட்கிறார். 


அப்போது ஒன்றரை மணி நேரம் என அருகே இருக்கும் போட்டியாளர்கள் சொல்ல, தொடர்ந்து பேசும் அசீம், "இந்த விக் எல்லாம் கழட்டி ஷாம்பூ போட்டு குளிச்சிட்டு வர டைம் ஆகும்" என் அசிம் கூறுகிறார்.


தொடர்ந்து, அவரும் கதிரவனும் பேசி கொண்டிருக்க, விக் எல்லாம் கழற்றி பேஸ்ட் போட்டு ஒட்டுவதாக குறிப்பிடும் அசீம், நான் குளிக்க போனால் 10 நிமிடத்தில் வந்து விடுவேன் என்றும் குறிப்பிடுகிறார். ஷிவின் விஃக் வைத்தாக குறிப்பிட்டு அசீம் பேசிய விஷயம், பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Advertisement

Advertisement

Advertisement