• Feb 02 2023

காதல் மனைவியுடன் ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்...லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Listen News!
Aishu / 1 month ago
image

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து 'டீசல்' படத்தில் நடித்து வருகிறார். 


படங்களில் பிஸியாக நடித்து வந்து கொண்டிருந்த இவர் கடந்த மாதம்  சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் பெற்றோர்களால் தனக்கு நிச்சயிக்கப்பட்ட நர்மதா உதயகுமார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 


இவர்களின் திருமணத்திற்கு பிரியா பவானி ஷங்கர், பிந்து மாதவி உள்ளிட்ட திரை பிரபலங்களும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்திருந்தனர்.


இந்நிலையில் பிரபலங்கள் பலரும் தமது கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை புகைப்படம் மூலம் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


இவ்வாறுஇருக்கையில் ஹரிஷ் கல்யாண்-நர்மதா ஜோடி தமது கிறிஸ்மஸ் கொண்டாட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.அதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.




Advertisement

Advertisement

Advertisement