• Sep 27 2023

‘LEO' படத்தில் அர்ஜுனின் ஹரால்டு தாஸ் கதாபாத்திர அறிமுக போஸ்டர் இன்று மாலை ரிலீஸ்

stella / 1 month ago

Advertisement

Listen News!

அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் லியோ.இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்து வருவதோடு த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.


அப்படத்திலிருந்து ஏற்கனவே நான் ரெடி தான் என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.இருந்தாலும் இப்பாடல் பல சர்ச்சைகளையும் சந்தித்தது.இதனை அடுத்து சஞ்சய்தத்தின் பிறந்தநாளில் அவரது காரெக்டரான அன்டனி காரெக்டர் குறித்து அப்டேட் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் அர்ஜுன் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதால் அர்ஜுன் நடிக்கும் காரெக்டரின் அப்டேட் இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement