• Mar 29 2024

அஜித்தின் துணிவு படத்தின் ப்ரீமியர் ஷோவைப் பார்த்து ஹாப்பியான ஷாலினி- கண்டிப்பா படம் பிளாக்பஸ்டர் தானாம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரகனி, பிரேம் குமார், பக்ஸ், சிபி, அமீர் மற்றும் பாவனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் தான் துணிவு. இப்படத்தின் ப்ரீமியர் ஷோ  நேற்று மாலை சென்னையில் உள்ள 4 ஃப்ரேம்ஸ் ஸ்டூடியோவில் உள்ள தியேட்டரில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.


துணிவு படத்தின் ப்ரீமியர் ஷோவில் கலந்து கொண்ட நடிகை ஷாலினி அஜித் படத்தை பார்த்து ரசித்தார். வெளியே வரும் போது செம ஹாப்பியாக வந்த அவரிடம் ரசிகர்கள் படத்தை பற்றி கேட்கும் போது புன்னகை புரிந்தார். மேலும், ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.


நடிகை ஷாலினி உடன் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் துணிவு படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்தார். படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த அவர் ரசிகர்களிடம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இப்படம் வரும் ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில்  வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட வைக்க உள்ளது கன்ஃபார்ம்.


ஏழை மக்களுக்கு கிடைக்காமல் பணக்காரர்கள் பதுக்கி வைக்கும் பணத்தை எடுத்து ஏழை மக்களுக்கு கொடுக்கும் ராபின் ஹுட் கதை தான் அஜித்தின் துணிவு படத்தின் கதை என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆக்‌ஷன், அதிரடி, காமெடி, கருத்து என ஏகப்பட்ட விஷயங்கள் படம் முழுவதும் ரசிகர்களை உற்சாகப்படுத்த போகிறது என ரிப்போர்ட்கள் வெளியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement