• Apr 19 2024

விஜய் தேவர்கொண்டாவுடன் கை கோர்த்தபடி குட்நியூஸ் சொன்ன சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தற்போது 'குஷி' திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஜோடியாக சமந்தா நடிக்கின்றார். இப்படத்தின் உடைய படப்பிடிப்புகள் யாவும் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

அந்தவகையில் இப்படத்தை கடந்தாண்டு டிசம்பர் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். இருப்பினும் இடையே சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டமையால் படத்தின் ரிலீஸை தள்ளிவைத்தனர். 


இந்நிலையில் தற்போது ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதால், குஷி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்தவகையில் செப்டம்பர் 1-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 


இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா கரம்பிடித்தபடி இருக்கும் புகைப்படம் இடம்பெற்று உள்ளது. இதனையடுத்து அப்படம் வெற்றியடைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement