தன் சொத்துக்களை விற்று ஏழை மக்களுக்கு உதவிய நடிகருக்கு இன்று பிறந்த நாளாம் குவியும் வாழ்த்துக்கள்.

1327

தென்னிந்திய சினிமாவில் தனது கடின உழைப்பினால் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணியில் காணப்படும் பல நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் தான் நடிகர் சோனு சூட். இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோக நகரில் 1973-ஆம் ஆண்டு ஜூலை 30ல் பிறந்தார். 1996-ஆம் ஆண்டு சோனாலி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இஷாந்த் மற்றும் அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.பாலிவுட் திரைத்துரைத்துறையில் பல்வேறு படங்களில் குணசித்திர வேடம் மற்றும் வில்லன் வேடம் ஏற்று நடித்திருக்கிறார் என்பன தெரிந்ததே.

மேலும் திரையில் வில்லனாக பார்த்து மக்களால் வெறுக்கப்பட்ட சோனு சூட் இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின்போது, புலம்பெயர் மக்கள், தொழிலாலர்கள்,வெளிநாட்டு மாணவர்கள், விவசாயிகள் , ஏழைகள், ஆகியோருக்கு பெரிதும் உதவி செய்தார் என்பது யாவரும் அறிந்ததே.

அந்த வகையில் ஒரு கட்டத்தில் உதவிகள் செய்ய தன்னிடம் போதிய பணம் இல்லாததால் சோனு சூட் மும்பை ஜூஹு பகுதியில் இருக்கும் 2 கடைகள் மற்றும் 6 வீடுகளை வங்கியில் அடமானம் வைத்து ரூ.10 கோடி கடன் பெற்று ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்தாராம். மேலும் இவர் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருவதால் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.