• Dec 04 2022

உலகின் உயரமான கட்டிடத்தில் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து- மாஸ் காட்டும் புதிய வீடியோ

Listen News!
stella / 1 month ago
image
Listen News!

பாலிவூட் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ஷாருக்கான். இவர் பல சர்ச்சைகளில் சிக்கிய பின்னர் தற்பொழுது அட்லி இயக்கத்தில் ஜவான் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் நயன்தாராவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இது தவிர  ராஜ்குமார் ஹிரானியுடனும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.இது தவிர இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

சில நாட்களுக்கு முன் ஷாருக்கான், பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆவதையொட்டி இப்படத்தின்  முதல் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் பான் இந்திய படமாக ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நேற்று ஷாருக்கான் தனது 57வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது வீட்டில் கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர்களை சந்தித்து ஷாருக்கான் கையசைத்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவின.

 இந்நிலையில் ஷாருக்கான் பிறந்தநாளை முன்னிட்டு உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் பிறந்தநாள் வாழ்த்து வீடியோ திரையிடப்பட்டுள்ளது. கடந்த 4 வருடங்களாக ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு புர்ஜ் கலிஃபாவில் வீடியோ திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.