• Apr 24 2024

நயன்தாரா பாணியில் திருமணத்தை நடத்த முடிவெடுத்த ஹன்சிகா- இப்போ இது தான் ட்ரெண்டிங்கா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் நடிப்பில் இறுதியாக மஹா என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் இவர் சோலோ ஹுரோயினாக நடித்து அசத்தியிருந்தார் என்பதும் முக்கியமாகும்.

மேலும் இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான பாரதி கண்ணம்மா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து படவாய்ப்புக்கள் குவிந்ததால் விஜய், விஷால், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.


இந்த நிலையில் சமீபகாலமாக படவாய்ப்புக் குறைந்ததால் அண்மையில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.அவரது நீண்ட நாள் காதலர் சொஹைல் கதூரியா என்பவரை தான் டிசம்பர் 4ம் தேதி நடக்கும் திருமணத்தில் அவர் கரம்பிடிக்க இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றபோது அதன் ஒளிபரப்பு உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியதாக தகவல் வெளியானது. அதனால் ஒரு ருபாய் கூட செலவில்லாமல் திருமணம் நடந்தது என்றும் கிசுகிசுக்கப்பட்டது.


இந்நிலையில் ஹன்சிகாவும் அதை பின்பற்றி ஒரு பிரபல ஓடிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

















Advertisement

Advertisement

Advertisement