• Mar 23 2023

அண்ணாமலையார் கோவிலில் பூஜிக்கப்பட்ட மாலை அணிவித்து.. சிவபக்தன் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய குருக்கள்.!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை சிவராத்திரி சிறப்பு பூஜையில் பங்கேற்று வீடு திரும்பும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். மயில்சாமியின் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.


இந்நிலையில் மயில்சாமியின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வடபழனியில் உள்ள ஏ.வி.எம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளும் ஏற்கெனவே முழுவீச்சில் நடைபெற்று வந்திருந்தன.

இந்நிலையில் நடிகர் மயில்சாமி தீவிரமான ஒரு சிவ பக்தர் என்பதால் விண்ணதிரும் சிவ வாத்தியங்களுடன் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. அத்தோடு மயில்சாமி உடலுக்கு சிவனடியார்கள் சிவபுராணம் இசைத்து மரியாதை செலுத்தினர். 


அதுமட்டுமல்லாது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் குருக்கள் இன்று காலை மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இருந்தனர். அப்போது அண்ணாமலையார் கோயிலில் பூஜிக்கப்பட்ட வெட்டி வேர் மாலையை அவர்கள் நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அணிவித்தனர்.


மேலும் "அண்ணாமலையாரின் தீவிர பக்தன் மயில்சாமி" எனவும் குருக்கள் கூறி இருந்தார். இவ்வாறாக சிவபக்தன் மயில்சாமிக்கு சிவனுக்கு கொடுக்கின்ற மரியாதை அளவிற்கு பலரும் அஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement