• Jun 04 2023

திடீரென ஒற்றுமையாக மாறிய குணசேகரன், ஜனனி, கதிர்... கேக் வெட்டிக் கொண்டாட்டம்... 'எதிர்நீச்சல்' அப்படி என்னதான் விசேஷம்..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. ஏனைய சீரியல்களை விடவும் இந்த சீரியலிற்கு என ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. தினம் தினம் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.


அந்தவகையில் தற்போது இதில் குணசேகரன் வீடே ரணகளமாகி இருக்கின்றது.  கதிரின் அட்டகாசமோ கை மீறிய வண்ணம் இருக்கின்றது. எப்போ இந்த வீடு மறுபடியும் கலகலப்பாக மாறும் என்பதனை காண பலரும் ஆவலுடன் உள்ளனர்.


இந்நிலையில் இந்த சீரியலானது தற்போது 400 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனை சீரியல் குழுமத்தினர் கேக் வெட்டிக் கொண்டாடி இருக்கின்றனர்.


இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இவர்களின் வெற்றிப் பயணத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement