• Mar 28 2023

அப்பத்தாவிடம் பணிந்து போன குணசேகரன்- போட்டுத் தள்ள முடிவு செய்த ஜான்சி ராணி- எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் எதிர்நீச்சல் சீரியல்

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரிஆர்பியில் முதலிடத்தைப் பிடித்து நிற்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் ஒவ்வொரு நாளும் பல பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றது.

அதன்படி அப்பத்தா ஆதிரையின் கல்யாணத்தை நிறுத்திவிடு என்று சொன்னபோது குணசேகரன் சரி நிறுத்தி விடுறேன். ஆனா அதுக்கு நீ 40% ஷேர் எனக்கு கொடுத்து விட வேண்டும் என்று டீல் போட்டார்.


ஆனால் இதை கேட்ட அப்பத்தா எதுவுமே பதில் சொல்லாமல் மௌனம் காத்தது கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் குணசேகரன் இந்த சொத்துக்காக தான் இவ்வளவு வீரப்பா இருந்தாரா என்று நினைக்கும் பொழுது அடுத்த நொடியிலே ஒரு மாஸ்டர் பிளான் போட்டு காய் நகர்த்தி வருகிறார். ஒரு பழமொழி கூட உண்டு ஒரு கல்லிலே இரண்டு மாங்காய். அதை இவர் தான் சரியாக பயன்படுத்துகிறார் என்றே சொல்லலாம்.அதாவது என்னவென்றால் ஒரு பக்கம் அப்பத்தாவிடம் இருந்து 40% பங்கு ஆட்டைய போடணும், மறுபக்கம் ஆதிரைக்கு திருமணம் செய்து வைத்து அதன் மூலமாக எஸ்கேஆர் சொத்தை கரக்கணும் என்று தம்பிகளுடன் சேர்ந்து திட்டத்தை தீட்டி வருகிறார். அதே நேரத்தில் கரிகாலனை வீட்டுக்கு கொண்டு வந்தா சொத்துக்கள் வராது ஏகப்பட்ட பிரச்சனைகள் தான் வரும் என்று யோசித்து இருக்கிறார்.

இதற்கிடையில்  சக்தி  முதல்முறையாக ஜனனிக்கு சப்போர்ட் பண்ணி இவர் குரலை உயர்த்தி பேச ஆரம்பித்து விட்டார்.. அதாவது சக்திக்கு இப்பதான் சக்தியை வந்து இருக்குன்னு சொல்லலாம். இதே போலவே எப்பொழுதும் சக்தி மற்றும் ஜனனி இரண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பது.


இதற்கு அடுத்து குணசேகரனால் அவமானப்பட்ட கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி அதிரடியாக குணசேகரனின் சோலியை முடிப்பதற்கு திட்டம் போடுவார் என்று எதிர்பார்த்த நேரத்தில் காசு வெட்டி போடுவேன்னு சொன்னது சிரிப்பு தான் வந்தது. ஆனாலும் கோபத்தின் உச்சத்தில் இருக்கும் சவுண்ட் சரோஜா அதாங்க நம்ம ஜான்சி ராணி, குணசேகரனை நல்லா வச்சு செய்யப் போறார் மட்டும் தெரியுது. என்னதான் நடக்கும் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement