• Sep 22 2023

விஜய் டிவி பக்கம் தாவிய எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் - ஓஹோ..விஷயம் இது தானா?

Jo / 1 month ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் நிறைய படங்கள் நடித்தாலும், இயக்கினாலும் அதில் கிடைக்காத ஒரு வரவேற்பு மாரிமுத்து அவர்களுக்கு எதிர்நீச்சல் சீரியல் மூலம் கிடைத்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. ஜீவானந்தம், குணசேகரன், ஜனனி இவர்கள் 3 பேரை வைத்து அடுத்து பரபரப்பான கதைக்களம் வர இருக்கிறது.



இந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்து இப்போது ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு அதிகம் பயன்படுகிறார்.

தற்போது இவர் விஜய் டிவி பக்கம் வந்துள்ளார் ஆனால் சீரியலில் நடிக்க இல்லை, ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.


பிரியங்கா தொகுத்து வழங்கும் Start Music நிகழ்ச்சியில் இந்த வாரம் சினி அம்மா மற்றும் சினி அப்பா என்ற தலைப்பில் பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர், அதில் மாரிமுத்துவும் ஒருவராக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement