• Sep 27 2023

பிரமாண்டமாக நடந்த காது குத்து விழா- அப்பாவின் பெயரையே மகனுக்கும் வைத்த ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா

stella / 1 week ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர்தான் ரஜினியின் இரண்டாம் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பின்னர் பெரும்பாலும் ரஜினியின் படங்களில் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றியதுடன் மஜா, சண்டக்கோழி, சிவகாசி, கத்தி என பல படங்களில் பணியாற்றி உள்ளார்.2010ஆம் ஆண்டு கோவா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, கோச்சடையான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.


இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. பின்னர் 2017 ஆம் ஆண்டு தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கியிருந்தார். இதில், பல உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்த போதிலும், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இது ஒரு புறம் இருக்க இவர் கடந்த 2019ஆம் ஆண்டு விசாகன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு அழகிய ஆண் குழந்தைக்கும் பிறந்தது. குழந்தையின் புகைபடங்கள் கூட வைரலானது. 


இந்நிலையில், இன்று விசாகனின் சொந்த ஊரான சூலூரில் குழந்தைக்கு இன்று காது குத்தி, பெயர் சூட்டியுள்ளனர்.ரஜினியின் பேரனுக்கு ரஜினி என பெயர் சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஜினிகாந்த் இந்த விழாவிற்கு வரவில்லை என்றாலும், அவருடன் அண்ணன் சத்தியநாராயணன் கலந்துகொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement

Advertisement