• Apr 19 2024

அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தில் தனது ROLE பற்றி கூறிய ஜி.பி. முத்து...அடடே ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் 'துணிவு'.

அத்தோடு வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


அத்தோடு இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

மேலும் இந்த படத்தின் 3 சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் சில்லா சில்லா பாடலை வைசாக் எழுத அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். இரண்டாவது சிங்கிள்  காசேதான் கடவுளடா பாடலை வைசாக் எழுதி பாடியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் கேங்ஸ்டா வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மூன்றாவது சிங்கிள் பாடலை சபீர் பாடியுள்ளார்.


துணிவு படத்தில் நடிகர் ஜி‌.பி. முத்து நடிப்பதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறுஇருக்கையில் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜி.பி. முத்துவிடம் இது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. துணிவு படத்தில் நடித்துள்ளீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜி.பி. முத்து, ஆமா துணிவு படத்தில் நடித்துள்ளேன். நார்மலான ரோலில் வீட்டில் இருக்கும் ஒரு நபராக துணிவு படத்தில் வருகிறேன்.அத்தோடு அஜித் சாருடன் இணைந்து நடிக்கவில்லை" என ஜி.பி. முத்து பதில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement