• Apr 19 2024

மைனா நந்தினியிடம் காதலைச் சொன்ன ஜி.பி முத்து- இடையில் புகுந்து குழப்பி விட்ட விக்ரமன்- செம ஜாலியான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் டிஆர்பி கண்டெய்னரான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், இதுவரை 14 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். இதனையடுத்து தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், அமுதவாணன், ஏடிகே, மைனா என மொத்தம் 7 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். 

இவர்களில் அமுதா பினாலே டிக்கெட்டை வென்று இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டார். அதனால் மீதமிருக்கும் 6 பேரில் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு இந்த வாரம் முழுவதும் பழைய போட்டியாளர்கள் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளனர். இது பார்வையாளர்களை குஷியடையச் செய்துள்ளது.

இவர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்தும் விளையாடியும் வருகின்றனர். இதனால் பிக் பாஸ் வீடு, ஆனந்தம் விளையாடும் வீடாக மாறியுள்ளது. இப்படி ஒரு நிலையில் மைனாவிடம் தனது காதலை வெளிப்படுத்துவது போல நடிக்கிறார். அப்போது கூடவே இருந்த விக்ரமன் கலாய்த்துள்ளார்.இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement