• Mar 29 2024

துணிவு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜி.பி முத்து- அடடே இது செம சர்ப்ரைஸாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி விட்டது.இப்படத்தில் அஜித்துடன் ஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி, பிரேம், ஜி. எம். சுந்தர், வீரா, அமீர், பாவனி, பக்ஸ், மகாநதி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


மேலும் இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் சில்லா சில்லா பாடலை வைசாக் எழுத அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார்.

 இரண்டாவது சிங்கிள் பாடல் காசேதான் கடவுளடா பாடலை வைசாக் எழுதி பாடியுள்ளார். மூன்றாவது சிங்கிள் பாடல் கேங்ஸ்டா கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.இந்நிலையில் துணிவு படத்தில் யூடியூப் பிரபலம் ஜி.பி. முத்து நடித்துள்ளார் என  தகவல்கள் வெளியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement