• Apr 20 2024

இரண்டாவது முறையாக புதிய மாடல் காரை வாங்கிய ஜிபி முத்து - அடடே இது இத்தனை கோடி பெறுமதியானதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலங்களைப் போல யூடியூப் மூலம் பல பிரபலங்கள் உருவாகி வருகின்றனர்.அவ்வாறு தனக்கு வந்த கடிதங்களை வெள்ளந்தியாக வாசித்து தனக்கே உண்டான வட்டார வழக்கு மொழியில் பதில் கமெண்டுகளை கூறுவதன் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து.

இவரது பேச்சுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.இந்நிலையில்தான், ஜிபி முத்து ஒ ஹூண்டாய் வென்யூ மாடலில் அதிக விலை கொண்ட புதிய ரக காரை வாங்கியிருக்கின்றார்.இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் அந்த கார் குறித்த விபரங்களையும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இந்த மாடல் கார்கள், இந்திய சந்தை மதிப்பில் ரூ.7 லட்சம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. அதாவது ஜிபி முத்து வாங்கியிருக்கும் இந்த கார், இந்த மாடல் கார்களின் டாப் 10 காரில் வருவது குறிப்பிடத்தக்கது. ஹீண்டாயின் குளோபல் டிசைன் லாங்வேஜ்க்கு இன்லைனாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த SUV ரக கார் பார்க்க மாஸிவாகவும், ஷைன் அடிக்கும் லுக்கிலும் கலக்குகிறது.

கொஞ்சம் Wide ஃபீல் கொடுக்கும் இந்த காரில் LED eyebrows இருக்கிறது, இதன் swirl pattern நியூ டைமண்ட் அலாய் கட் வீல்ஸ் சும்மா சுழலும்போது செம்ம கெத்தாக இருக்கும். பின் பக்கத்தில் இருக்கும் வித்தியாசமான டிசைன் கொண்ட tail lamp ஒரு எலைட் லுக் தருகிறது. ஃபேஷன் & ஃபியூச்சர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த காரில் in-built ஏர் பியூரிஃபயர் வசதி, பவர் டிரைவர் சீட், ஒயர்லெஸ் சார்ஜர் சகலமும் இருக்கிறது.

அத்துடன் அசத்தலான பத்து வட்டார மொழியுடன் Support பண்ணக்கூடிய அலாக்ஸா கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட்டுடன் கூடிய சவுண்ட் infotainment system, மேலும் 60 கனெக்டிங் ஃபீச்சர்ஸ் என கலக்குகிறது வென்யூ. ECO, Normal, Sports என 3 டிரைவிங் மோடில் இயக்கக் கூடிய இந்த காரில் 5 பேர் வரை பயணிக்க முடியும்.

இந்த மகிழுந்து ரக கார் டைபூன் சில்வர், டைடன் கிரே, டெனிம் ப்ளூ, போலார் ஒயிட், ஃபயரி ரெட், பாண்டம் பிளாக், ஃபயரி ரெட் & பாண்டம் பிளாக் கலந்த நிறம் உள்ளிட்ட நிறங்களில் வருகிறது.மேலும் இதற்கு முதல் அண்மையிலும் இவர் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement