• Apr 18 2024

குடும்பத்துடன் இணைந்து தீபாவளியை கோலாகலமாக கொண்டாடிய ஜி பி முத்து- மனுஷன் இப்போ தான் ஹாப்பி.

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 6 இல் கலந்து கொண்ட முக்கிய பிரபலம் தான் ஜி.பி முத்து. இவர் இநத நிகழ்ச்சியில் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்திருந்ததோடு க டாப் 5 போட்டியாளர்களில் நிட்சயம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


 ஆனால், கடந்த வாரம் ஜிபி முத்து திடீரென பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். தனக்கு  புகழ் பணத்தை விட தனது பிள்ளைகள் தான் முக்கியம் என இந்த நிகழ்ச்சியிலிருந்த வெளியேறினார். இது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. இருப்பினும் பாசக்கார தந்தை எனப் பலரும் பாராட்டி இருந்தனர்.


இவர் பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 14 நாட்கள் இருந்திருக்கிறார். மேலும், நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த உடன் ஜி பி முத்து அவர்கள் உடன் மகன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்.அந்த புகைப்படத்தில் ஜிபி முத்து மகனின் உடல் முழுவதும் ஒயர்கள் இருந்தது. அது பார்ப்பதற்கு கஷ்டமாக இருந்தது. ரசிகர்கள் பலருமே ஜிபி முத்துவிற்கு ஆறுதலும் கூறியிருந்தார்கள்.


இந்த நிலையில் ஜிபி முத்து தனது youtube சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், தன்னுடைய பிள்ளைகளுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடி இருக்கிறார். பிள்ளைகளுடன் வீடியோவை தான் அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த பலரும் ஜி பி முத்துவிற்கு தீபாவளி வாழ்த்துக்கள் கூறி இருந்தார்கள்.

\

Advertisement

Advertisement

Advertisement