• Apr 25 2024

அஜித்துடன் நடிக்கும் ஜி.பி.முத்து... அடுத்தடுத்து 5 படங்கள் ..யார் யாருடன்..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஜிபி முத்து அடுத்தடுத்து 5 படங்களில் கமிட் ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டிக்டாக் செயலியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான்  ஜிபி முத்து. டிக்டாக் செயலியை முடக்கியதால் தற்கொலை முயற்சி வரை சென்றார் ஜிபி முத்து. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஜிபி முத்து. ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஜிபி முத்து, மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் அதிர்ச்சியடைந்தனர் அவரது ரசிகர்கள். இவ்வாறுஇருக்கையில்  ஜிபி முத்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டிக் டாக் மூலம் அறிமுகமாகி ஊடகங்களின் துணையுடன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் திரைத்துறையில் சிறந்த ஒத்துழைப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

பிக் பாஸ் அனுபவம் சிறப்பாக இருந்ததாகவும் பிக் பாஸ் மூலம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தது மிக பெரும் பாக்கியம் எனவும் கூறியுள்ள ஜிபி முத்து, தனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது ஐந்து திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் நடிகை சன்னி லியோனுடன் திரைப் படத்தில் நடித்தது மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளார் ஜிபி முத்து.அந்த 5 படங்களும் யார் யாருடன் என்று கூறவில்லை.

இவ்வாறுஇருக்கையில்  அடுத்ததாக அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருப்பதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் ஜி.பி. முத்து கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement