இயக்குநர் சுந்தர்சிக்கு கோவிட் தொற்று உறுதி ! குஷ்புவிற்கு கொரோனா பரிசோதனை

328

இந்தியாமுழுவதும் கோரானா வைரஸின் இரண்டாவது அலை ஆரம்பமாகி பொதுமக்கள் உட்பட திரையுலகினரான இயக்குநர் முத்துராமன்,நடிகர் மாதவன் மற்றும் அவரது குடும்பத்தினர்,நடிகை நிக்கி,நடிகை நிவேதா உட்படப்பலரும் கோவிட் தொற்றிற்கு ஆளாகியிருந்தனர்.

அந்த வகையில் திரைப்படங்களை இயக்குவது மாத்திரமின்றி தயாரிப்பது நடிப்பது என சினிமாத்துறையில் தேர்ச்சி பெற்ற சுந்தர்சி தற்பொழுது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்கின்ற தகவலினை சுந்தர்சியின் மனைவியான நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பேஜில் பதிவிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல்கள் எல்லாம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில் தனது கணவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தற்பொழுது குணமடைந்துள்ளார் எனவும் இவருடன் தொடர்பாடலை மேற்கொண்ட அனைவரையும் விரைவாக கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் டுவிட் செய்துள்ளார் குஷ்பு