• Mar 23 2023

ஆஸ்கார் விருதை வென்று சாதனை படைத்த 'RRR' படம்.. படக்குழுவை வாழ்த்து மழையில் நனைய வைத்த ஆளுநர் தமிழிசை..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

பிரபலங்கள் பலரும் எதிர்பார்த்து இருக்கும் விழா என்றால் அது ஆஸ்கார் விருது விழா தான். அந்தவகையில் 95-ஆவது ஆஸ்கர் விருது விழாவானது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள டால்பி தியேட்டரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது. 

உலகிலிருந்து உயரிய சினிமா கலைஞர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதாவது இதில் இடம்பெற்ற நாட்டு நாட்டு  பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. 


அதுமட்டுமல்லாது செல்லோ சோ என்கிற குஜராத்தி திரைப்படமும், ஆல் தட் ப்ரீத் மற்றும் எலிபேன்ட் விஸ்பர்ரஸ் என்கிற ஆவணப் படமும் இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இதில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர் ஆர் ஆர்  படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றது.


இதனையடுத்து திரைபிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்படப் பலரும் ஆஸ்கர் விருது வென்ற ஆர் ஆர் ஆர் படக்குழுவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநரான தமிழிசை சௌந்தர்ராஜனும் தனது வாழ்த்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement