• Mar 29 2024

தனியாக எழிலிடம் சிக்கி முறையாக வாங்கிக் கொண்ட கோபி- ராதிகாவுக்கு பதிலடி கொடுத்த பாக்கியா- ஜெனியிடம் உண்மையைச் சொன்ன செழியன்

stella / 10 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். அதாவது கிச்சனில் இருக்கும் பாக்கியாவிடம் ராதிகா சென்று நேற்று கோபி கேட்ட விஷயத்தைக் கேட்டு ஷாக்காகிட்டீங்க தானே என்று கேட்கிறார்.

அதற்கு பாக்கியா கோபி சேர் கேள்வி கேட்டதால இல்லை. அவங்க கேள்வி கேட்ட யாரு இவங்களெல்லாம் என்னை கேள்வி கேட்கிறாங்களே எனற நினைச்சு தான் ஷாக்காகிட்டேன். அவர் நான் என்ன பண்ணுறேன் எங்க போறேன் என்று தான் யோசிக்கிறாரே தவிர உங்களைப் பற்றி எதுவும் யோசிக்கிறது இல்லை போல இது உங்க லைப் மேடம் நீங்க தான் கவனமாப் பார்த்துக்கணும்.


நான் என்ன வேணும் என்றாலும் பண்ணுவேன். எனக்கு நிறைய வேலை இருக்கு உங்களைப் பற்றி யோசிக்கிறதுக்கு எனக்கு கொஞ்சம் கூட டைம் இல்லை என்று சொல்லி பதிலடி கொடுக்கின்றார். பின்னர் எழில் வாக்கிங் போக அங்கையும் கோபி வருகின்றார். அப்போது கோபி எழிலிடம் பாக்கியா பழனியுடன் பழகுவது தப்பு என்று சொல்ல கோபமடைந்த எழில் உங்களுக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சுல எதுக்கு எங்க அம்மாவைப் பற்றி யோசிக்கிறீங்க.

எங்க அம்மா என்ன பண்ணினாலும் உங்களுக்கு என்ன?. ஒரு குடும்பத்திற்கு என்ன அவமானம் வரக்கூடாதோ அதெல்லாம் நீங்க வாங்கித் தந்திட்டீங்க. இதுக்கு மேல என்ன வேணும் இனிமேல் எங்க அம்மாவைப் பற்றி தப்பா பேசினீங்க என்றால் செழியன் சொன்னான் நான் செய்வேன் என்று சொல்லி விட்டு செல்கின்றார்.


தொடர்ந்து ஜெனியும் செழியனும் இருந்து பேசிட்டு இருக்கும் போது ஆபீஷில் செழியனுடன் வேலை செய்யும் பெண் போன் பண்ணுகின்றார். அதனால் செழியன் போன் எடுக்காமல் ஜெனியிடம் அந்தப் பெண்ணைப் பற்றி சொல்கின்றார். இதனால் ஜெனி இத்தனை முறையா கோஃல் பண்ணிட்டே இருப்பாங்க எனக் கேட்கின்றார்.

தொடர்ந்து ராதிகா கிச்சனில் இருந்து சமைத்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் கோபி ராதிகா வைத்திருந்த சுவிட்டை சாப்பிட்டு ராதிகாவுக்கு ஊட்டி விடுகின்றார். தண்ணீர் எடுப்பதற்காக வந்த செழியன் இதனைப் பார்த்து விடுகின்றார். இதனால் கோபி அந்த இடத்தை விட்டு செல்ல செழியனும் எதிரே நிற்கின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement