• Mar 29 2024

பழனியும் பாக்கியாவும் பேசுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கோபி- ஈஸ்வரிக்கு தெரிய வந்த உண்மை- செம கடுப்பில் ராதிகா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். பாக்கியாவின் கேன்டீன் திறப்பு விழா பங்சனுக்காக பாக்கியாவுடன் இங்கிலீஸ் கிளாசில் படிக்கும் பழனி மற்றும் நண்பர்கள் அனைவரும் வருகின்றனர்.


அவர்கள் வருவதைக் கண்ட செழியன் பாக்கியாவை அழைத்து அவர்களைக் காண்பிக்க பாக்கியாவும் அவர்களைக் கூட்டிக் கொண்டு போய் தனது குடும்பத்தை அறிமுகம் செய்து வைக்கிறார். அப்போது அதிர்ச்சியடைந்த பழனி உங்களுக்கு இவ்வளவு பெரிய பையன் மருமக்கள் எல்லோரும் இருக்கிறாங்களா எனக் கேட்கின்றனர்.


பின்னர் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை ஈஸ்வரி பார்த்துக்கொண்டிருக்க ஜெனியும் அமிர்தாவும் ஈஸ்வரியை அங்கிருந்து கூட்டிக் கொண்டு செல்ல முயற்சி செய்ய ஈஸ்வரி அவங்க கூட தாத்தா பேசிட்டு இருக்கிறேர் வாங்க அதில போகலாம் என்று பாக்கியா நிற்கும் இடத்திற்குச் செல்கின்றார். அங்கே இனியா பாட்டி இவங்க அம்மா கூட இங்கிலீஸ் கிளாஸ்ல படிக்கிறவங்க என்று அறிமுகம் செய்து வைக்கிறார்.


இதனை கேட்ட ஈஸ்வரி கோபமடைந்து பாக்கியாவிடம் இன்னும் என்ன எல்லாம் மறைச்சு வைச்சிருக்கிறியோ என்று தெரில என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டுச் வீட்டுக்கு செழியன் கூட சென்று விடுகின்றார். மேலும் இனியாவைத் தேடி நிகழ்ச்சிக்கு கோபி வர அங்கே பழனி பாக்கியாவிடம் உங்களுக்கு 30 வயசு வருமா ரொம்ப லட்சனமா இருக்கிறீங்க என்று கேட்கிறார்.


இதைக் கேட்டு கோபி அதிர்ச்சி அடைந்ததோடு பழனி பாக்கியாவிடம் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு பழனியைத் திட்டிக் கொண்டிருக்க பழனி நேரம் ஆகி விட்டதாக அங்கிருந்து கிளம்புகின்றார். பின்னர் ஜெனி கோபியைப் பார்த்து விட்டு இனியாவிடம் அழைத்துச் செல்ல இனியா நான் வரல டாடி தாத்தா கூட வாரேன் நீங்க போங்க என்று கூறுகின்றார்.

அப்போது ஜெனி சந்தனம் கொடுக்க அதை நெற்றியில் வைத்து விட்டு இனியா கொடுத்த சுவிட்ஸை்யும் கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப ராதிகா கோபியைத் திட்டுகிறார்.அத்தோடு உங்க முன்னாள் மனைவியின் பங்சனுக்கு வந்தீங்களா வீடடுக்கு வாங்க உங்களை வச்சுக்கிறேன் என்று திட்டுகின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement