• Apr 25 2024

"பெண்களே கொன்னுட்டீங்க போங்க"- ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கல்லூரி மாணவிகள்- ராஷ்மிகா போட்ட கமெண்ட்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த (11.01.2023) அன்று வெளியாகி உள்ளது.இயக்குர் வம்சி பைடிபள்ளி  இப்படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியானது.


வாரிசு படத்தின்  "ரஞ்சிதமே" பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடல்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னை MGR கல்லூரி பிஸியோதெரபி மாணவர்கள் பொங்கல் விழாவில் ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த வீடியோவுக்கு "பெண்களே கொன்னுட்டீங்க போங்க" என தலைப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்படத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement