• Apr 19 2024

ஆண் வேடத்தில் அட்டகாசம் செய்யும் ஜெனிலியா…படம் பிடித்த கணவர்…வைரலாகும் வீடியோ பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிப் படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆன ஒருவரே நடிகை ஜெனிலியா. இவர் தன்னுடைய கியூட்டான சிரிப்பு மற்றும் குறும்புத்தனமான நடிப்பு என்பவற்றின் மூலம் பல இளைஞர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் இவரைத் தொடர்ந்து எத்தனையோ நடிகைகள் வந்திருந்தாலும் இன்றும் பல ரசிகர்களின் மனங்களில் கனவுக் கன்னியாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றார். அதற்கு காரணம் வெகுளித்தனமான நடிப்பு, புன்னகை பொங்கும் முகம், எந்த உடை அணிந்தாலும் நச்சுன்னு இருக்கும் உடல் கட்டு போன்றன இவரை மற்ற நடிகைகளிடம் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியது.

இவரின் நடிப்புக் காலம் குறுகியதாகவும், சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் இன்றும் அச்சாணி போட்டது போல் இவர் நின்று நிலைத்திருக்கின்றார். குறிப்பாக 'பாய்ஸ்' என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும், அப்படத்தினைத் தொடர்ந்து விஜய்யுடன் 'சச்சின், வேலாயுதம்', ஜெயம் ரவியுடன் 'சந்தோஷ் சுப்ரமணியம்' என பார்த்து பார்த்து தேர்வு செய்த கதாபாத்திரங்கள் அனைத்துமே வேற லெவல் வெற்றியினை இவருக்கு ஈட்டித் தந்திருக்கின்றன.

இவ்வாறாக திரையுலகில் கனவு நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த ஜெனிலியா தனது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் சில காலங்களின் பின்னர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக திரையுலகை விட்டு மெல்ல மெல்ல விலகி இருக்கின்றார் ஜெனிலியா. இவர் சினிமாவில் தூரமாக இருப்பினும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாகவே இருந்து வருகின்றார்.

அதற்கு அச்சாரம் போடுவது போல் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் இணைந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்து வருகிறார். அந்த வகையில் தற்போதும் கட்டப்பொம்மன் மீசை போன்று ஆண் வேடம் அணிந்து போஸ் கொடுத்திருக்கின்றார். இதனை இவரது கணவர் ரித்தேஷ் படம் பிடித்து அதனை வீடியோவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.

என்றும் மாறாத புன்னகையோடு இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே வேற லெவலுக்கு ரீச் ஆகி விடும். அந்த வகையில் இந்த வீடியோவும் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement