• Mar 29 2024

கணவருடன் சேர்ந்து ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஜெனிலியா- கேக் வெட்டிக் கொண்டாடிய அழகிய தருணம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2003 ஆம் ஆண்டு Tujhe Meri Kasam என்கிற பாலிவூட் திரைப்படம் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை ஜெனிலியா. தொடர்ந்து தமிழில் பாய்ஸ்' படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகினார்.இப்படத்தில் இவருடைய கணவர் கதாநாயகனாக நடித்திருந்தார்.


பின்னர் தெலுங்கு, கன்னடா, ஹிந்தி, போன்ற மொழிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி அங்கேயும் நடித்து வந்தார்.முதல் படத்திலிருந்து ஜெனிலியா - ரித்தீஷ் தேஷ்முக் ஆகிய இருவரும் காதலிக்க துவங்கிய நிலையில், நீண்ட டேட்டிங்க்கு பின்னர் 2012 ஆம் ஆண்டு... பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.


மிகவும் ரொமான்டிக் நட்சத்திர ஜோடியாக பாலிவூட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும், ரித்தீஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா ஜோடிக்கு, இரு மகன்களும் உள்ளனர்.


கடந்த சில வருடங்களாக திரை துறையில் தலைகாட்டாமல் இருந்த ஜெனிலியா, தற்போது தன்னுடைய குழந்தைகள் நன்கு வளர்ந்து விட்டதால்... அடுத்தடுத்து சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் தோன்றி வருகிறார். மேலும் தன்னுடைய கணவர் ரித்தீஷ் தேஷ்முக் 'வேத்' மராத்தி படத்திலும் நடித்துள்ளார்.


இருவருமே அறிமுகமானது ஒரே படம் என்பதால்... இந்த நட்சத்திர ஜோடி, திரையுலகில் அறிமுகமாகி 20 வருடங்கள் ஆனதை, மும்பையில் ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.


இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


திரையுலகில் காலடி எடுத்து வைத்து 20 வருடங்கள் ஆன பின்பும் கூட... ஜெனிலியா மற்றும் அவருடைய கணவர் ரித்தீஷ் ஆகிய இருவருமே முதல் படத்தில் பார்த்தது போலவே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement