• Dec 07 2022

கயல் சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோசூட்...லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

Listen News!
Aishu / 3 weeks ago
image
Listen News!

மக்கள் மத்தியில் திரைப்பட நடிகர்களுக்கு ஏத்தாற்போல சின்னத்திரை நடிகர் நடிகைகளும் அதற்கேற்ப நல்ல வரவேற்ப்பு உண்டு.அந்தவகையில் செய்திவாசிப்பாளராக பணியாற்றிய அபிநயா, தற்போது முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் சன்டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதி என்ற பாத்திரத்திலும், கண்மணி தொடரில் சினேகா என்ற பாத்திரத்திலும் நடித்ததோடு மாத்திரம் அல்லாது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம்பேசுதடி தொடரில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலிலும் நடித்து வருகின்றார்.

இவ்வாறு இருக்கையில் இவருக்கும் சீரியல் நடிகர் தீபக்கிற்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் ரசிகர்களுக்கு குட் நியுஸ் கூறி இருந்தார்கள்.

அதாவது சில நாட்களுக்கு முன்பு அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெட்டர்னிட்டி புகைப்படத்தை பகிர்ந்து தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுடன் ஷேர் செய்தார். அப்போது தான் இத்தனை நாட்களாக் அபிநயா கயல் சீரியலில் வயிறை மறைத்துக் கொண்டு நடித்தார் என்பது பலருக்கும் தெரிய  வந்தது. 


ஆல்யா, ஃபரீனா வரிசையில் அபிநயாவும் கர்ப்பமாக இருந்துக் கொண்டே சீரியலில் நடித்தார்.இந்நிலையில் அபிநயாவுக்கு சில நாட்களுக்கு முன்பு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது.


இந்நிலையில் தனது கர்ப்பகால போட்டோசூட்டை பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.