டிஸ்னி பிளஸ்என்னும் பிரபல ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கனா காணும் காலங்கள்.இதில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர்களுக்கென்றும் தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.
இந்த சீரியலில் அபி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த வரும் தீபிகாவும் கௌம் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ராஜா வெற்றி பிரபுவும் நீண்ட நாள் நண்பர்கள் ஆவார்கள். இப்படியான நிலையில் தீபிகா அண்மையில் தனக்கு திருமணம் என்று அறிவித்திருந்தார்.
தன்னுடைய 6 வருட நண்பனைத் தான் திருமணம் செய்யவுள்ளதாகவும் இது அரேஞ்ச் மேரேஜ் என்றும் தெரிவித்தார்.ஆனால் அவரது காதலன் யாரென்று அவர் தெரிவிக்கவே இல்லை. இதன் பின்னர் தம்முடைய என்கேஜ்ட்டென்டில் தான் ராஜா வெற்றிபிரபுவைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போவதாக அதிகார்ப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்பொழுது இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தாலிகட்டும் போது தீபிகா மகிழ்ச்சியில் கண் கலங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Listen News!