• Mar 28 2024

வெறும் 20 கோடியில் எடுக்கப்பட்டிருந்தாலும்... 20 நாள் வசூலில் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த 'காந்தாரா'..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகைப் பொறுத்தவரையில் அடுத்தடுத்து தரமான திரைப்படங்கள் வெளியாகி, சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா' படம் தான் டாப்பில் உள்ளது. அதாவது கடந்த மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 


இப்படமானது கன்னடத்தை தொடர்ந்து தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தான் காந்தாராவையும் தயாரித்துள்ளது.

ரிஷப் ஷெட்டியுடன் மானஸி, கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படம், காட்டில் வாழும் ஆதிகுடிகளின் தொன்ம கதைகளின் பின்னணியில் உருவாகியுள்ளது. 


அதாவது வனத்துறையினருக்கும் காட்டுப் பகுதிகளில் வாழும் பூர்வகுடிகளுக்கும் இடையே நடக்கும் பிரச்சினையை ஆழமாக இப்படத்தில் பேசியுள்ளார் ரிஷப் ஷெட்டி.

இந்தப் படம் மொத்தமாக 20 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் தான் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 100 கோடி வசூலித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது.

ரூ.16 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், வெளியான 20 நாட்களிலேயே, கன்னடத்தில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது என ஏற்கெனவே கூறப்பட்டது. 


இது தவிர தற்போது மற்றுமொரு செய்தி வெளியாகி இருக்கின்றது. அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரூ.50 கோடிக்கு மேலும், வெளிநாட்டில் ரூ.15 கோடிக்கு மேலும் வசூல் செய்திருக்கிறது.

அந்தவகையில் கடந்த 20 நாட்களில் உலக அளவில் மொத்தமாக இந்தப் படம் ரூ.175 கோடி வசூல் சாதனையை நெருங்கியிருக்கிறது. இது மிகப்பெரிய வெற்றியாகவும் சாதனையாகவும் பலராலும் பார்க்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement