• Mar 28 2024

வடிவேலு முதல் - கோபி, சுதாகர் வரை.. விபூதி அடித்த ஹரிஸ்! வெளியானது போலி டாக்டர் பட்டம் விவகாரம்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பல்கலைக்கழகத்தின் கண்ணில் மண்ணை தூவி ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகத்தை ஏமாற்றிய நடிகர் பார்த்திபன் ,நகைச்சுவை நடிகர் வடிவேலு ,யூடியூப் பிரபலங்களான கோபி ,சுதாகர் வரை அத்தனை பிரபலங்களையும் போலி டாக்டர் பட்டம் கொடுத்து ஏமாற்றிய பலே கில்லாடிதான் இந்த ஹரிஷ் 

முதலில் இந்த மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த போது உரிய அனுமதியுடன் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதாக் கூறிய  ஹரிஷ்,பிறகு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவானார்.

தலைமறைவான அவரை ஆம்பூரில் வலைவீசி பிடித்தனர் கோட்டூர்புரம் போலீசார் .இப்படி ஒரு நூதன மோசடியை பக்காவாக பிளான் போட்டு  கச்சிதமாக அரங்கேற்றி அத்தனை பேரையும் ஏமாளிகளாக்கிய ஹரிஷ், ஒரு சிறந்த பேச்சாளர் ,படிப்பில் கெட்டிக்காரர். ஆனால் இன்று கல்லூரி படிப்பை முடித்த இந்த மூன்று ஆண்டுக்குள் தனது பொல்லாத ஆசையாவும் மோசடி மன்னனாக நம்முள் இருக்கிறார்.

சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரபலமான கல்லூரிகள் பொறியியல் படிப்பை கடந்த 2020ஆம் ஆண்டு முடித்திருக்கிறார் .எந்த தலைப்பு கொடுத்தாலும் பாயிண்ட் பாயிண்டாக தனது பேச்சுத் திறமையால் பலரையும் வசீகரிக்கும் திறமை கொண்டவராக வலம் வந்த ஹரிஷுக்கு தனியார் நிறுவனம் ஒன்று சிறந்த பேச்சாளர் என்ற பட்டம் வழங்கி உள்ளது 

படத்தை வாங்கிய கையோடு புத்தி பேதலிக்க நாம் ஏன் இது போன்று பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என திசைமாறி பயணிக்கத் தொடங்கியிருக்கிறார் ஹரிஷ் .உடனடியாக சர்வதேச ஊழல் தடுப்பு மையம் மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பை முறைப்படி பதிவு செய்து சென்னை எம்ஜிஆர் நகரில் அலுவலகத்தையும் தொடங்கியிருக்கிறார்.

 தனியார் தொலைக்காட்சியில் வேலை செய்யும் மக்கள் தகவல் அலுவலர் என குட்டி ராஜா என்ற மகாராஜாவிடம் அறிமுகம் செய்து அவர் மூலம் சினிமா பிரபலங்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்து இருக்கிறார் .தான் நினைத்தபடி கடந்த 2021ஆம் ஆண்டு கோயம்பேடு வளசரவாக்கம் என இரண்டு இடங்களில் வைத்து கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் 

2022ஆம் ஆண்டு இரண்டு நிகழ்ச்சிகளை இதேபோல் நடத்தியிருக்கிறார் சினிமா பிரபலங்களுக்கு பட்டங்களை இலவசமாகவும் ,அதே மற்றவர்களுக்கு ஒரு படத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வரையும் வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறார் ஹரிஷ். 

இதற்கிடையே தனது அமைப்பிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க அனுமதி இருப்பதாக தன் கைப்பட ஆவணங்களை திருத்தி எழுதி இருக்கிறார். செல்போன் செயலி மூலம் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகத்தின் கையெழுத்தை அப்படியே பதிவிட்டு அண்ணா பல்கலைக் கழகத்தில் விழா நடத்த அவர் பேரில் அனுமதி கேட்டிருக்கிறார்.இறுதியாக வள்ளி  நாயகத்தையும் வெறும் பட்டம் வழங்கும் விழா என அழைத்து அவர்  கைப்படவே போலி கௌரவ டாக்டர் பட்டத்தை கொடுத்து இருக்கிறார்.

 போலி கௌரவ டாக்டர் பட்டத்திற்கு சுமார் 3 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்தது அதில் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததையும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள ஹரிஸ், தான் மட்டுமல்ல பல அமைப்புகள் இது போல் போலியான பட்டங்களை வழங்கி வருவதாக கூறியிருப்பது போலீசாரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement