• Apr 24 2024

வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடு.. சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பல கஷ்டங்களுக்கு பிறகு சொந்தமாக வீட்டு கட்டும் தங்களது கனவு நிறைவேறி இருப்பதாக அந்த வீடியோவில் ஹேமா கூறியுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவி சீரியல்களில் ஃபேமிலி ஆடியன்ஸை மிகவும் கவர்ந்த சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது . 

எனினும் இதே டைமிங்கில் மற்ற சேன்ல்களில் புது புது சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வந்தாலும் டிஆர்பியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிநடை போட்டு வருகின்றது. இந்த சீரியலின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஹேமா ராஜ்குமார். இவர் மயிலாடுதுறையை சேர்ந்ததோடு ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.



ஒருசில படங்களிலும் நடித்துள்ளார். அத்தோடு வாய்ப்பு கிடைக்காத ஆரம்ப காலத்தில் ஆங்கராகவும் பணியாற்றி இருக்கிறார் ஹேமா. இதன் பின்பு தான் அவருக்கு சீரியல் வாய்ப்பு வர அதன் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆரம்பத்தில் மீனாவை நெகட்டிவாக காட்டினர்.

 ஆனால் போகபோக மீனாவின் கதாபாத்திரத்துக்காகவே இந்த சீரியலை நிறைய மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர் என்று தான் கூற வேண்டும். யூடியூப்பில் தனியாக யூடியூப் சேனல் ஆரம்பித்து  அதன் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வரும் ஹேமா, தனது பர்சனல் லைஃப் பற்றி அதிகம் பகிர்வார். எனினும் தற்போது சென்னையில் கணவர் குடும்பத்துடன் வசித்து வரும் ஹேமாவுக்கு 2 வயதில் மகன் இருக்கிறார்.

எனினும் சமீபத்தில் தான் இவர் சொந்தமாக கார் வாங்கினார். அதையும் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். இவ்வாறுஇருக்கையில்  இத்தனை ஆண்டுகளாக வாடகை வீட்டில் இருந்த ஹேமா தற்போது சொந்தமாக வீடு கட்டி வருகிறார். கூடிய விரைவில் அந்த வீட்டுக்கு ஷிப்ட் ஆகவுள்ளார். பல கஷ்டங்களுக்கு பிறகு சொந்தமாக வீடு கட்டும் தங்களது கனவு நிறைவேறி இருப்பதாக அந்த வீடியோவில் ஹேமா கூறியுள்ளார். அதுமட்டுமில்லை அந்த கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் புது வீட்டை ரசிகர்களுக்கு சுற்றி காட்டியுள்ளார். ரசிகர்கள் பலரும் ஹேமாவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.




Advertisement

Advertisement

Advertisement