• Apr 25 2024

நல்லவேளை, தனுஷ் நேத்து பிக் பாஸ் பார்க்கல-வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை பார்த்தவர்களோ, நல்ல வேளை தனுஷ் இதை பார்க்கவில்லை என கூறி வருகிறார்கள்.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திருச்சிற்றம்பலம் படத்தில் வந்த பாடலை பாடிக் கொண்டே மைனாவுடன் சேர்ந்து பிக்பாஸ் வீட்டில்  ஆடியிருக்கிறார் விக்ரமன்.

மைனாவும், விக்ரமனும் பாடிக் கொண்டே ஆடியதை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது....

நல்லாவே இல்லை. தயவு செய்து பாடிக்கிட்டே ஆடாதீங்க. நல்ல வேளை இந்த கொடுமையை தனுஷ் பார்க்கவில்லை. மைனா ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்தும் விக்ரமனுக்கு ஆட வரவில்லை. தயவு செய்து அந்த பாடலை கொலை செய்யாதீங்க.

இளம் ஜோடிகளுக்கு பிடித்த பாட்டு அது. அதை இந்த அளவுக்கு தொம்சம் செய்திருக்க வேண்டாமென கூறி வருகின்றனர்.

அத்தோடு மைனா நந்தினி தானாக இல்லாமல் கேமராவுக்காக நடிப்பதாக கூறுகிறார்கள் பார்வையாளர்கள். மைனா நந்தினியும், மகேஸ்வரியும் ரொம்ப மோசம். செமயாக நடிக்கிறார்கள்.

மேலும் இது சீரியல் இல்லை பிக் பாஸ் நிகழ்ச்சி என்பதை யாராவது அவர்களுக்கு நினைவூட்டுங்கள் என்று பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்கு செல்கிறார் என்று தகவல் வெளியானதுமே அவரின் ரசிகர்கள் ஷாக் அடைந்தார்கள். அக்கா ரொம்ப அப்பாவியாச்சே. பிக் பாஸ் வீட்டிற்கு சென்றால் அவரை அழ வைத்த வேடிக்கை பார்ப்பார்களே என்று பயந்தார்கள். ஆனால் அவர்கள் பயந்தது போன்று எதுவும் நடக்கவில்லை.



Advertisement

Advertisement

Advertisement