• Apr 19 2024

மன்னிச்சிடு வைரவன், உன் நினைவுகள் எப்போதும் இருக்கும்"- நடிகர் வைரவன் மறைவிற்கு விஷ்ணு விஷால் போட்ட டுவிட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் வெண்ணிலா கபடிகுழு.இப்படத்தினை சசீந்திரன் இயக்கியிருந்தார்.இப்படத்தில்  அப்புகுட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி உட்பட பலர் நடித்து இருந்தனர்.

கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகர் ஹரி வைரவன்.இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும்  நடித்திருக்கிறார்.


இந்த நிலையில் ஹரி வைரவன் இன்று நடு இரவில் 12.30 மணியளவில் மரணம் அடைந்துள்ளார். மதுரையை சார்ந்த ஹரி வைரவன் மரணம் ரசிகர்கள் & சக நடிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் உள்ள கடச்சனேந்தல் முல்லை நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஹரி வைரவன் உடல்  வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வெண்ணிலா கபடிகுழு படத்தில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விஷால், தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ஹரி வைரவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டுவிட் செய்துள்ளார். அதில், "மன்னிச்சிடு வைரவன், உன் ஆன்மா சாந்தி அடையட்டும். வெண்ணிலா கபடிகுழு படத்திலிருந்து உன் நினைவுகள் எப்போதும் இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.















Advertisement

Advertisement

Advertisement