• Dec 01 2022

முதல் முறையாக பிள்ளைகளுடன் இணைந்து வேறலெவலில் போட்டோ ஷுட் நடத்திய ஜி.பி முத்து- குவியும் லைக்குகள்

Listen News!
stella / 3 weeks ago
image
Listen News!


டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். கடந்த மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்ட ஜிபி முத்து, முதல் நபராக வெளியேறியும் அதிர்ச்சி கொடுத்தார்.


முதல் இரண்டு வாரத்தில் அந்நிகழ்ச்சியில் டிஆர்பி எகிறியது அதற்கு முக்கிய காரணம் ஜிபி முத்து தான். இதனால் இந்த சீசன் இறுதிவரை ஜிபி முத்து இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது மகனின் உடல்நிலை கருதி இரண்டாவது வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிக் கொள்வதாக அறிவித்தார்.


மகன் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை பார்த்து நெகிழ்ந்து போன கமல்ஹாசன், அவரை வெளியே செல்ல அனுமதித்தார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஜிபி முத்துவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது ஓ மை கோஸ்ட் எனும் படத்தில் சன்னி லியோன் உடன் இணைந்து நடித்துள்ளார் ஜிபி முத்து. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.


இந்த நிலையில் ஜி.பி முத்து தனது பிள்ளைகளுடன் இணைந்து புதிய போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளனர். இது குறித்த புகைப்படத்தை தனது இன்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.