• Mar 27 2023

ரூ.50 கோடிக்கு பிளாட், சொகுசு கார்கள்.. அதியா ஷெட்டி - கே.எல்.ராகுலுக்கு பிரபலங்கள் கொடுத்த பரிசுகள் என்ன தெரியுமா?

stella / 2 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டிக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல் ராகுலுக்கும்  கடந்த 23ம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது..நட்சத்திர ஜோடியின் திருமணத்திற்கு பிறகு நடந்த பார்ட்டியில் பாலிவுட் மற்றும் கிரிக்கெட் உலகின் பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். புதுமணத் தம்பதிகளுக்கு நட்சத்திரங்கள் ஆடம்பரமான பரிசுகளை வழங்கினர்.


சுனில் ஷெட்டி தனது மகள் மற்றும் மருமகனுக்கு மிக விலையுயர்ந்த பரிசை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர வீட்டை பரிசாக கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.


விராட் கோலி தனது சக வீரருக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார். இதன் விலை 2.17 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மகேந்திர சிங் தோனியும் கலந்து கொண்டார். ரூ.80 லட்சம் மதிப்புள்ள கவாஸாகி நிஞ்சா பைக்கை பரிசாக வழங்கி உள்ளார்.


பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ.1.64 கோடி மதிப்புள்ள ஆடி காரை பரிசளித்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் ஜாக்கி ஷெராப்பும் கலந்து கொண்டார். அவர் 30 லட்ச மதிப்பிலான சொகுசு வாட்சை பரிசாக அளித்தார்.


அதியா ஷெட்டியின் நெருங்கிய நண்பரான பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், தனது நண்பரின் திருமணத்திற்கு ரூ 1.5 கோடி மதிப்புள்ள வைர வளையலை பரிசாக அளித்துள்ளார்.சுனில் ஷெட்டியின் கண்டாலா பண்ணை வீட்டில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.


திருமணத்திற்கு பிறகு மும்பையில் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்துக்கு 3000 பேர் அழைக்கப்பட்டனர்.கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டியின் திருமண புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement