• Dec 01 2023

முதலில் அதை நீக்குங்கள்- பிரபல ஆடை நிறுவனத்தை கண்டபாட்டுக்குத் திட்டிய அனுஷ்கா சர்மா

stella / 11 months ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை அனுஷ்கா சர்மா.இவர் பிரபல நடிகரான விராட் கோலியைத் திருமணம் செய்திருப்பதோடு இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முதல் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இதனை அடுத்தும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்த நிலையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 70 ஆண்டுகள் பழமையான பூமா நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள், ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.


இதைத்தொடர்ந்து, கடந்த 2020- ஆம் ஆண்டு பூமா ஆடை அணிந்திருந்த புகைப்படம் ஒன்றை  அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை பூமா இந்தியா நிறுவனம் அனுஷ்கா சர்மாவின் அனுமதியின்றி தங்கள் நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

தனது அனுமதியின்றி புகைப்படங்களை விளம்பரத்துக்காக பயன்படுத்திய பூமா நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை அனுஷ்கா சர்மா பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 


அதில், " நான் உங்கள் விளம்பர தூதுவராக இல்லாத போது என் புகைப்படத்தை விளம்பரத்துக்காக பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். தயவு செய்து அதை நீக்குங்கள்" என்று பதிவிட்டு கண்டன குரல் எழுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement