• Mar 23 2023

“மார்க் ஆண்டனி” படப்பிடிப்புத் தளத்தில் தீ விபத்து; நிற்காமல் சென்ற டிரக் வண்டியால் பரபரப்பு

Jo / 1 month ago

Advertisement

Listen News!

விஷால் நடித்து வரும் ’மார்க் ஆண்டனி’என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென விபத்து ஏற்பட்டதை அடுத்து பட குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விபத்துக்குள்ளானது. 

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து பட குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். 

படப்பிடிப்பு தளத்தை நோக்கி டிரக் ஒன்று நிற்காமல் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.விஷால், சுனில், நடிகர் டிஎஸ்ஜி, ரிதுவர்மா, எஸ்ஜே சூர்யா உள்பட பலரது நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement