• Mar 29 2024

புகை பிடிப்பவர்களுக்கு அபராத தொகை உயர்த்த வேண்டும்- கடுமையாக விமர்சித்த பிரபல இயக்குநர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களை எடுத்திருந்தாலும் ரசிகர்களால் அறியப்பட்ட இயக்குநராக வலம் வருபவர் தான் மோகன் ஜி. இவர் திரௌபதி பகாசூரன் போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். இவர் இது தவிரை சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது இவர் கூறிய விடயம் ஒன்று பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.அதாவது மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சில புதிய விதிமுறைகளும், புதிய அபராதங்களும் கூட அறிவிக்கப்பட்டுள்ளன.


இந்த வாகனச் சட்ட திருத்தத்தின்படி புதிய அபராதங்கள் நேற்று முதல்  அமலுக்கு வந்துள்ளது.இந்த  நிலையில், இதேபோல் பொது இடங்களில் புகைப்படம் பிடிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மோகன் ஜி தன் டுவிட்டர் பக்கத்தில், வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல பொது இடங்களில் #புகை பிடிப்பவர்களுக்கு அபராத தொகையையும், சிறுவர்களுக்கு #coollip மற்றும் #குட்கா விற்பனை செய்யும் கடைகாரர்களுக்கும் அபராதத்தை 10 மடங்கு உயர்த்தி அறிவிக்க  முதல்வர் திரு @mkstalin சார் அவர்களை கேட்டு கொள்கிறேன்..’’என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement